ரேஷன் கடைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

 
ரேஷன் சர்க்கரை

இந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உட்பட  அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைகிறார்கள்.  

இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 7 நாட்கள் வரையில் விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் ரேஷனில் பொருட்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  

முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது – முழு விவரம் உள்ளே

அதன்படி ஒவ்வொரு மாதமும் 2 வது வெள்ளிக்கிழமை, 2 வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதுண்டு.அதன்படி இந்த மாதமும் அன்றைய நாட்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகள் பணிநாளாக அறிவிக்கப்பட்டது.  இதன் காரணமாக பிப்ரவரி 22ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  மொத்தமாக 7 நாட்கள் விடுமுறை  விடப்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே திட்டமிட்டு ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web