லட்டு பிரசாதத்தில் அடுத்த அதிர்ச்சி... நெளிந்த எலிக்குட்டிகள்... பதறிய பக்தர்கள் | அதிர்ச்சி வீடியோ!

 
மும்பை லட்டு

திருப்பதியைத் தொடர்ந்து மும்பையின் பிரபலமான சித்தி விநாயகர் கோவில் பிரசாதமான லட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள் இருப்பதாக வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் ஆந்திர மாநிலம் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமின்றி தற்போது அதற்கான ஆதாரம் வெளியாகி, ஆந்திர அரசியலில் இந்த விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. மேலும், பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் உள்ள லட்டு பிரசாத தட்டு மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதள வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீசித்திவிநாயக் கணபதி மந்திர் அறக்கட்டளையின் தலைவர் சதானந்த் சங்கர் சர்வாங்கர் கூறுகையில், “வீடியோவில் காட்டப்பட்டுள்ள இடம் அசுத்தமாக உள்ளது. கோவிலில் வீடியோ எடுக்கப்படவில்லை. அந்த வீடியோ வெளியில் எங்கோ எடுக்கப்பட்டது. இதுகுறித்து, கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், இதுகுறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.  சித்திவிநாயகர் கோவில் செயல் அலுவலர் வீணா பாட்டீல் கூறுகையில், ''புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், கோவில் வளாகம் தெரியவில்லை. டிஜிபி அளவிலான அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டு குழு அமைக்கப்படும்,'' என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web