தங்கத்தைப் போல் இனி வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம் - ஆர்பிஐ அறிவிப்பு!
இதுவரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து மட்டுமே கடன் பெற்று வந்த நிலையில், தற்போது வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை அடகு வைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில், கடன் தொகையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

உங்கள் வசம் உள்ள வெள்ளியின் மதிப்பில் 85% வரை கடனாகப் பெறலாம். (உதாரணத்திற்கு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி இருந்தால் ரூ. 85,000 வரை கடன் கிடைக்கும்). ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை: வெள்ளியின் மதிப்பில் 80% வரை கடன் வழங்கப்படும். பெரிய அளவிலான கடன் தேவைப்படுவோருக்கு வெள்ளியின் மதிப்பில் 75% வரை கடன் கிடைக்கும்.
வீடுகளில் உள்ள வெள்ளிப் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் ஆபரணங்களை அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த இந்தப் புதிய நடைமுறை வழிவகுக்கும். தங்கத்தை அடகு வைக்கும்போது பின்பற்றப்படும் அதே எளிமையான ஆவண நடைமுறைகளே இதற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் தங்களது அவசரப் பணத்தேவைக்கு வெள்ளியை ஒரு சிறந்த மாற்றாகப் பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் நகைக்கடன் நிறுவனங்களில் இந்தச் சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
