தீபாவளிக்கு ரூ.10, ரூ.20 நோட்டுகள் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி பெயரில் பரவும் தகவல் போலி!

 
ரூபாய்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், தீபாவளி பண்டிகையின்போது ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Is there shortage of Rs 10, Rs 20 and Rs 50 currency notes this Diwali? RBI clarifies - The Economic Times

குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஊக்குவிக்கப்படுவதாகவும் அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டிகைக் காலத்தில் பணம் தேவைப்படுவோர் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Diwali cash crunch? PIB Fact Check debunks claim of shortage of Rs 10, Rs 20, Rs 50 notes - India News | The Financial Express

ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பு அமைப்பான PIB Fact Check தெரிவித்துள்ளது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்பாக இதுபோன்ற அறிவிப்பு எதையும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே, சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.