கணவரை விட்டு விலக தயார்... ஜானி மாஸ்டர் மனைவி பரபரப்பு பேட்டி!
தன் கணவர் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகவும் தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடன இயக்குநர் ஜானி, தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்ததாக 21 வயது இளம்பெண் புகார் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜானி மீதான பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகவும் தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜானி மாஸ்டரின் மனைவி சுமலந்தா (எ) ஆயிஷா அளித்திருக்கும் பேட்டியில், “புகார் அளித்திருக்கும் அந்தப் பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். பின்பு, சினிமா வாழ்க்கையைப் பார்த்து சொகுசாக இருக்க வேண்டும் என இந்தத் துறைக்கு வந்து, என் கணவரிடம் வேலைக்கு சேர்ந்தார். ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக சேரக்கூட பணம் இல்லாமல் இருந்தவருக்கு உதவியது இவர்தான்.
நடன இயக்குநர் அல்லது கதாநாயகியாக வேண்டும் என்பது தான் அந்தப் பெண்ணின் விருப்பம். மும்பையில் வன்கொடுமை நடந்ததாக சொல்கிறாரே, அதற்கு என்ன ஆதாரம்? அப்படி என்றால் ஏன் அப்போதே சொல்லவில்லை? அந்தப் பெண் சொன்னபடி பாலியல் தொல்லைக்குள்ளாகி இருந்தாலும் ஏன் இவரிடம் தொடர்ந்து வேலைப் பார்க்க வேண்டும்? இவரிடம் பணிபுரிவது அதிர்ஷ்டம் என ஏன் சொல்ல வேண்டும்?
பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டால் என் கணவரிடம் இருந்து விலகத் தயார்” என கூறியிருக்கிறார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா