ஊர் திரும்ப ரெடியா?... தமிழகம் முழுவதுமாக 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

 
விடுமுறை பேருந்து சொந்த ஊர் கிளாம்பாக்கம்  கூட்டம் பண்டிகை திருவிழா விடுமுறை பேருந்து சொந்த ஊர் கிளாம்பாக்கம்  கூட்டம் பண்டிகை திருவிழா

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக முடிவடைந்த நிலையில், வாக்கு செலுத்துவதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக, போக்குவரத்துத் துறை மெகா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மொத்தம் 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். வார இறுதி நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் கூட்டமாகத் திரும்புவார்கள் என்பதால், பயணிகளின் வசதிக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் தீபாவளி நெரிசல் சொந்த ஊர்

போக்குவரத்துத் துறையின் திட்டப்படி, இன்று வழக்கம் போல இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், முக்கிய ஊர்களிலிருந்து 2,500 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. உச்சகட்டமாக நாளை (ஞாயிறு), சென்னைக்கு மட்டும் 3,184 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 பேருந்துகளும் என மொத்தம் 14,508 பேருந்துகள் மக்கள் சேவையில் ஈடுபட உள்ளன. தேர்தலுக்குச் சென்ற மக்கள் எவ்விதச் சிரமமுமின்றிப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆம்னி பேருந்து

இன்றைய நிலவரப்படி சுமார் 19,676 பயணிகளும், நாளை 47,001 பயணிகளும் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்த்து நிம்மதியாகப் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் உடனடியாகத் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் காய்ச்சல் தணிந்துள்ள நிலையில், தற்போது பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளதால், பயணிகளின் பாதுகாப்பிற்காகப் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.