விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார்! தேனி எம்.பி பேட்டி!

 
நடிகர் விஜய்

தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி ஓ.பி ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இது வரை தொகுதி மேம்பாட்டு நிதியில் 17,07,9,1088 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது 159 பணிகள் நிறைவேற்றப்பட்டு ,அதில் 127 பணிகள் முடிக்கப்பட்டது, 37 பணிகள் நடந்து வருகிறது. தேனி – மதுரை ரயில் பாதை திட்டம் 2010ம் ஆண்டு முதல் 2019 வரை சுமார் 403 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டது.
 

போடி -சென்னை இடையே மாதத்திற்கு 13 முறை ரயில்கள் இயக்கப்பட்டு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வட வீரநாயக்கன்பட்டியில் 8 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

எம்.பி ரவீந்திரநாத்

ஜல் ஜீவன் திட்டத்தில் 106.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ நிவாரண நிதி 3 கோடியே 32 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கிராம சாலைகள் ஆரம்பிக்க 57.39 கோடி ரூபாய் பணிகள் செய்யப்பட்டது. கழிப்பிடங்கள் கட்ட 92.64 கோடி ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறப்பட்டு நிதி பெற்று இதுவரை 850 கோடி ரூபாய் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.


திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிவிட்டு தமிழகத்தில் மது கொள்ளை நடந்து வருகிறது. கள்ள சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது, மேலும் மணல் கொலை, திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் டிடிவி தினகரன், ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

நடிகர் விஜய்

தேனி மாவட்டத்தில் விவசாயிகளுடைய பிரச்சினை காரணமாக மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவர பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக அரசு வெற்றி பெற்று 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் வாய்ப்பு ஏற்பட்டால் அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

From around the web