இது தான் KERALA STORY | ஒன்றிணைந்த மலையாளிகள்... ஒரு உசுரைக் காப்பாற்ற ரூ.34 கோடி நிதி திரட்டிய மக்கள்!

 
அப்துல் ரஹீம்

இது தான் ரியல் கேரளா ஸ்டோரி என்று கேரள மக்களை மொத்த உலகமும் கொண்டாடுகிறது. ஒரு உசுரைக் காப்பாற்ற கேரள மக்கள் ஒன்றிணைந்து ரூ.34 கோடி நிதி திரட்டியிருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்காக 34 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார்.அப்போது சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் உள்ள குடும்பத்திற்கு கார்ஓட்டுநராக பணிபுரியும் வாய்ப்பு ரஹீமுக்கு கிடைத்தது. இதற்கிடையில், அந்த வீட்டில் 15 வயது ஊனமுற்ற சிறுவனை ரஹீம் கவனித்து வந்தார்.

ஒரு நாள் ரஹீல் 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுடன் காரில் சென்றபோது, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. அது ரஹீமின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதாவது டிராபிக் சிக்னலின் போது காரை நகர்த்துமாறு ரஹீமிடம் சிறுவன் வற்புறுத்தியுள்ளான். ஆனால் ரஹீம் அதைச் செய்யாமல் சிக்னல் முடியும் வரை இருந்தான். சிறுவன் ரஹீமின் முகத்தில் எச்சில் துப்பவும் அடிக்கவும் ஆரம்பித்ததால் நிலைமை மோசமாகியது. பின்னர், வாக்குவாதத்தின் போது, சிறுவன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ சாதனத்தை தவறுதலாக தட்டி விடப்பட்டுள்ளது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

அந்தக் கருவி குழந்தை சாப்பிடவும் சுவாசிக்கவும் உதவுகிறது. கருவி காருக்குள் விழுந்ததில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ரஹீம் மீண்டும் கருவியை எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான். இந்த சம்பவம்தான் ரஹீமை மரணம் வரை கொண்டு வந்தது. சவூதி அரேபியாவின் சட்டத்தின்படி ரஹீம் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனின் குடும்பத்தினர் மரண தண்டனையை நாடிய பிறகு ரஹீமின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இன்னொரு பக்கம் சம்பளத்திற்காகக் காத்திருந்த ரஹீமின் மனைவியும் மகனும் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் நிலைகுலைந்து போகின்றனர். இதையடுத்து, தனது நண்பர்களின் அறிவுறுத்தலின்படி ரஹீம் மேல்முறையீடு செய்தார். அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், இறந்த சிறுவனின் குடும்பத்துடன் அக்டோபர் 16, 2023 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இழப்பீடாக 15 மில்லியன் (சுமார் ரூ. 33 கோடி) சவுதி ரியால் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறுவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதையும் 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கட்டளை விதித்தனர்.

 

அதன்படி, இந்த ஒப்பந்தம் இம்மாதம் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணம் வசூலித்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், அந்தத் தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், கேரளாவில் மனிதாபிமானப் புரட்சி ஏற்பட்டு, மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இதுதான் உண்மையான கேரளக் கதை என்பதை உணர்த்தும் வகையில் நடந்துள்ளது. அதாவது ரஹீமின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மலையாள மக்கள் தங்கள் நண்பரை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததை உணர்ந்து சேவ் அப்துல் ரஹீம் என்ற பெயரில் கிரவுட் ஃபண்ட் தொடங்குகிறார்கள்.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள, தெரிந்த, தெரியாத மலையாள தோழர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் நன்கொடை சேகரித்து வந்தனர். தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஏப்ரல் 16ம் தேதிக்குள் பணத்தை வசூல் செய்துள்ளனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் இதுவரை 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. கேரள மக்களின் புரட்சியால் ரஹீமின் விடுதலை சாத்தியமாகியுள்ளது.

ஒருவரையொருவர் மனிதர்களாகப் பார்த்து அனைத்து வேறுபாடுகளையும் களைந்து மனிதாபிமான உதவிக்காக மலையாளத் தோழர்கள் கைகோர்த்து வருகின்றனர். இதுதான் உண்மையான கேரளக் கதை. இந்த நிகழ்வு மலையாளிகளின் மனம் எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது, ஒரு உயிரைக் காப்பாற்ற அனைவரும் கைகோர்ப்பது பலரின் இதயங்களை வென்றுள்ளது. எனவே சேகரிக்கப்பட்ட தொகையை உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு ரஹீமை மீட்கும் பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web