ரெட் அலர்ட்! இன்று எந்தெந்த மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும்? -IMD வெளியிட்ட முழு விபரம்!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று (ஜூலை 5) மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் முக்கியப் பகுதிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் 'ரெட் அலர்ட்'   விடுக்கப்பட்டுள்ளது.

இன்று 24 மணி நேரத்தில் 20.4 சென்டிமீட்டருக்கும் அதிகமாக அசாதாரணப் பெருமழை கொட்ட வாய்ப்புள்ளதாகக் கூறி, கோவா,  ஒடிசா, குஜராத் மாநிலத்தில் குறிப்பாகச் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை உட்பட கொங்கன் (மற்றும் மத்திய மகாராஷ்டிரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு நகர்ப்புற வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மழை

அடுத்தபடியாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள், சத்தீஸ்கர், உத்தராகண்ட், தெலுங்கானா, கர்நாடகா, கடலோரக் கர்நாடகப் பகுதிகள்., ராஜஸ்தான் கிழக்குப் பகுதி, மேற்கு வங்கம் கங்கைச் சமவெளிப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மணிக்கு 30 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பருவமழைக் காற்று தீவிரமாக வீசுவதால், கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் யாரும் அடுத்த சில நாட்களுக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனப் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்புள்ள மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், மாவட்ட நிர்வாகங்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.