சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் - ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்டாக குறைப்பு!

 
மஞ்சள்

சென்னை நகருக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையை முன்னிட்டு விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு மழையின் தாக்கம் முழுமையாகக் குறையாததால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட்

அதேபோல், அருகிலுள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையும் தற்போது வாபஸ் பெறப்பட்டு, அப்பகுதிகளுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.