வீட்டை விட்டு வெளியே வராதீங்க... இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்... !
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று பிற்பகல் கரையை கடக்கவிருந்த புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர்.
Moderate intensity rains to continue in chennai central areas and new clouds will develop and move into city as long as Cyclone is there in the open sea. So on and off rains for central chennai.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024
Intense to very intense rains in Tiruvallur, Kancheepuram and chengalpet belts.… pic.twitter.com/NzkEd9ToLk
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயலால் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!