என்ன காரணம்? பாகிஸ்தானில் சிவப்பு கம்பளத்திற்கு திடீர் தடை... புதிய பிரதமர் அதிரடி உத்தரவு!

 
சிவப்பு கம்பளம்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து  வருகிறது. அதே நேரத்தில் சமீபத்தில்  நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையிலான 16 அமைச்சர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் மார்ச் 11ம் தேதி நடத்தப்பட்டது. பதவியேற்ற உடனே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், செலவுகளை குறைக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிவப்பு கம்பளம்

அந்த வகையில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நடவடிக்கையாக  பிரதமர், அமைச்சர்கள் தங்களது சம்பளம் மற்றும் அரசு சலுகைகளை கைவிட வேண்டும் என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர்

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   “அரசு நடைமுறையின்படி வௌிநாட்டு தலைவர்கள் வரும்போது மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். மற்ற அரசு நிகழ்வுகளில் சிவப்பு கம்பள வரவேற்பு முற்றிலும் தற்காலிகமாக  தடை செய்யப்பட்டுள்ளது. ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web