தாக்குதலை குறைக்கணுமா? அந்த பேச்சுக்கே இடமில்லை.. இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

கடந்த ஆண்டு அக்., 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காஸாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து, பலரை கொன்றது. ஆனால், அதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல்

முதலில் இவை சிறிய தாக்குதல்கள். இருப்பினும், காலப்போக்கில் அவை மிகப் பெரிய தாக்குதல்களாக அதிகரித்தன. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்துவதால், அது ஒரு பிராந்திய போராக வெடிக்கும் என்று உலகம் அஞ்சுகிறது. ஈரான் உட்பட உலக நாடுகள் வந்தால் பேரழிவை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக குறைந்தது 21 நாட்கள் போர் நிறுத்தம் இருக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இஸ்ரேல் இதையெல்லாம் காது கொடுத்து ஏற்கவில்லை. லெபனான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தெற்கு இஸ்ரேல் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அதுவரை ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதலை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை.  எங்களது நடவடிக்கைகள் பேசும் என்று தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web