விலை உயர்வு அபாயம்... இந்தியாவுக்கு வரும் பாமாயில் வரத்து குறைப்பு!

 
பாமாயில் எண்ணெய் பாமாயில் எண்ணெய்

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 40 சதவீதம் பாமாயில் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த நாடுகள் பாமாயிலை உயிரி எரிபொருளாக மாற்றி தங்களது உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பாமாயில் அளவு கணிசமாகக் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய்க்கான வரியை குறைத்தது மத்திய அரசு

பாமாயில் விலை குறைவாகவும் அதிக காலம் கெடாமலும் இருப்பதால் சிப்ஸ், பிஸ்கட், சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது நிலவும் உலகளாவிய பதற்றம் மற்றும் கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்றவை இந்த இறக்குமதி சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளன. இந்த தட்டுப்பாடு காரணமாக வரும் காலங்களில் சமையல் எண்ணெய் மட்டுமின்றி பேக்கரி பொருட்கள் மற்றும் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பாமாயில் எண்ணெய்

இந்தோனேசியா தனது டீசலில் 40 சதவீதம் வரை பாமாயிலை கலக்க முயற்சி செய்து வரும் நிலையில் மலேசியாவும் இதே போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் பாமாயில் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறது.