'உசுர விட ரீல்ஸ் முக்கியம்'... கிணற்றின் விளிம்பில் குழந்தையுடன் நடனமாடிய பெண்... பகீர் வீடியோ!
அந்த வீடியோவில் ஒரு பெண் தனது உயிரை மட்டுமல்லாமல் ஒரு குழந்தையின் உயிரையும் பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளார். ஒரு கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு குழந்தையுடன் நடனமாடியபடியே வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.
15 sec #Reels is more important than the child's life.pic.twitter.com/FRg5TUbSAq
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 19, 2024
அந்த வீடியோ கிளிப்பில், குழந்தையைக் கவனக்குறைவாகப் பிடித்துக் கொண்டே கேமரா முன் போஸ் கொடுப்பதற்காக அவள் கைகளை திரும்பத் திரும்ப மாற்றிக் கொண்டிருக்கிறார். குழந்தை அவளது ஒரு காலில் ஒட்டிக் கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். அதே நேரத்தில் குழந்தையின் உடல் கிணற்றுக்கு மேலே காற்றில் தொங்குகிறது.
இருப்பினும் அந்த பெண், பாடலுக்கு ஏற்ப நடனமாடுவதில் முற்றிலுமாக மூழ்கி விட்டதால், 15 வினாடி ரீலுக்காக எல்லாவற்றையும் பணயம் வைத்து, தனது உயிர் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை அந்தப் பெண் முழுவதுமாக மறந்த நிலையில் காணப்படுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

"இன்றைய உலகில் பொறுப்பான தாயாக இருப்பதை விட சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் புகழ் போதை முக்கியமானது இருப்பது வருத்தமளிக்கிறது. அதற்கு இது சாட்சியாக இருப்பது மிகவும் கொடுமை" என்று ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “குழந்தையின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அந்தப் பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
