லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 26 பேர் பலி!

 
படகு கவிழ்ந்து

லிபியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கிரீசுக்குள் நுழைய முயன்ற அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில், மீட்கப்படாத 26 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற சோகமான தகவல் வெளியாகியுள்ளது.

லிபியாவிலிருந்து 77 அகதிகளுடன் புறப்பட்ட படகு, மத்திய தரைக்கடல் வழியாகக் கிரீசுக்கு உட்பட்ட கவ்டோஸ் தீவு அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரெனக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றில் மூழ்கி

விபத்து குறித்துத் தகவலறிந்த கிரீஸ் கடலோரக் காவல் படையினர் உடனடியாக விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, இதுவரை 51 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிக் காணாமல் போன எஞ்சிய 26 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவரவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த அச்சம் நிலவிவரும் நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.