ஜனவரி 27க்கு பிறகு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்டதும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் புதின் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும்.

மீறினால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமெரிக்க குடியுரிமை பெற கடும் கட்டுப்பாடுகளுக்கு கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

அதன்படி ஜனவரி 27ம் தேதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்காவுக்குள் நுழைய முறையான அனுமதிப் பெற்ற அகதிகள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணத்தை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
