சேலத்தில் இரண்டு வாரங்களாகக் காணாமல் போன கர்ப்பிணி சடலமாக மீட்பு - உறவினர்கள் போராட்டம்!

 
சேலம் போலீசார் சடலமாக மீட்பு கர்ப்பிணி கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் தேடப்பட்டு வந்த கர்ப்பிணிப் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோகிலா கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

கோகிலா காணாமல் போனது குறித்துப் புகார் அளித்தும், உரிய நேரத்தில் காவல்துறையினர் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கோகிலாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.