மகளிர் உரிமை திட்டத்தில் தளர்வுகள்.!! ஓய்வூதியம் பெறுபவர்களும் விண்ணப்பிக்கலாம்!!

 
மகளிர் உரிமை தொகை

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்றது. முதற்கட்டமாக 20,765 ரேஷன்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை விண்ணப்பப்‌ பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மகளிர் உரிமை தொகை

அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகின்றன. 2-ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

முன்னதாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான அறிவிப்பில், “முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற தொடர் சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தோர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள்” என கூறப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளானது.

முதியோர் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய அரசு ஓய்வூதியம் வழ்ங்கும் போது, அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தகுதிக்குள் வந்தும், தங்களது குடும்பத்தில் ஒருவர் முதியோர் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காக மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது என்று கூறுவது சரியல்ல, என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு இது தொடர்பான கோரிக்கைகளை ஏற்று தளர்வுகளை அறிவித்துள்ளது.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

உரிமை தொகை

எனவே மேற்குறிப்பிட்ட பெண்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

ஒரு கோடி பேர் மட்டுமே பயனாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. திட்டம் தொடங்கப்பட இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web