குற்றவாளியை ஈஸியா பிடிக்க சூப்பர் டிவைஸ்.. இரத்தம் சிந்தாமலே அதிரடி காட்டப்போகும் சென்னை போலீஸ்!

 
ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் டிவைஸ்

சென்னை பெருநகர காவல்துறை புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கவும், சந்தேக நபர்களை பிடிக்கவும் இந்த கருவியை சென்னை பெருநகர காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனத்திற்கு ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் டிவைஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம், 10 அடி முதல் 25 அடி தூரத்திற்குள் சந்தேகப்படும் நபர்களையோ அல்லது தப்பியோடிய குற்றவாளிகளையோ எளிதில் சிக்க வைக்கும் திறன் கொண்டது இந்த ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் சாதனம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் குறைந்த இறப்பு அணுகுமுறையை நோக்கமாகக் கொண்டு இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் மாதங்களில் இந்த ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவியின் பயன்பாட்டை அதிகரிக்க சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. சாதனம் 8 அங்குல கெவ்லர் வடத்தை வெளியேற்றி, சந்தேக நபரின் உடலை மூன்று முறை வரை வேகமாகச் சுற்றி, சந்தேக நபரை அசையாமல் செய்கிறது. மேலும், இந்த கருவி அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு ஏற்படும் காயங்களைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்த புதிய முயற்சியை வரவேற்கிறேன். புதிய கருவிகள் சண்டைகளை நிறுத்துதல் அல்லது குற்றவாளிகளைத் துரத்துவது போன்ற பதட்டமான சூழ்நிலைகளின் போது உடல்ரீதியான மோதல்களுக்கு பாதுகாப்பான மாற்றாக செயல்படும். அனைத்து காவல்துறையினருக்கும் இதுபோன்ற கருவிகள் வழங்கப்பட்டால், தப்பியோடிய சந்தேக நபர்களைக் கொல்லும் அதிகாரத்தை காவல்துறைக்கு இனி நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.சக்திவேல் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web