இந்திய நிறுவனங்களின் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவின் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தற்போதுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்தியாவின் 3 நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ''பனிப்போர் காலத்தின்போது இந்தியாவை சேர்ந்த இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், இன்டியன் ரேர் எர்த்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று மேம்பட்ட எரிசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை குறைப்பது அமெரிக்க வெளியுறவு கொள்கையின் நோக்கத்துக்கு ஆதரவாக இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணான செயல்களுக்காக சீன நாட்டிற்கு சொந்தமான 11 நிறுவனங்கள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!