பிரபல நீரியல் நிபுணர் முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார்!

 
sivanappan
 

பிரபல நீரியல் நிபுணர், பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை கழகத்தில் இளங்கலை கட்டடப் பொறியியல் படித்து முடித்த இரா.க.சிவனப்பன், காரக்பூர் மாநிலத்தில் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்றவர். 
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை, நவீன பாசன வடிகால் முறைகள் ஆகியவை பற்றிய சிறப்பு அறிவியலை பயின்றவர். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் இரா.க.சிவனப்பன். 

rip
1956ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் முதன்மையராகவும் பணியாற்றியவர்.
பல நாடுகளில் நீர் மேலாண்மை, பாசன நுட்பங்கள், சொட்டு நீர்ப் பாசனத்துக்கு ஆலோசகராக இருந்தவர் இரா.க.சிவனப்பன். ஐநா சபை வளர்ச்சி திட்டம், உலக வங்கி, உலக நீர் ஆய்வு நிறுவனம் உட்பட உலகளாவிய அமைப்புக்கும் ஆலோசகராக இருந்தார்.

தமிழ்நாடு அரசின் திட்டக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன். 1,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் இரா.சு.சிவனப்பன். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் நீர் மேலாண்மை தொடர்பான உயர்மட்டக் கருத்தரங்குகளில் ஆய்வு உரைகளை நிகழ்த்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web