ரெப்போ வட்டி விகித உயர்வு.. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு EMI அதிகரிக்கும் அபாயம்!
இந்திய ரிசர்வ் வங்கி (தனது பணவியல் கொள்க ஆய்வின் போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் மாதாந்திரத் தவணைத் தொகை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.
வட்டி விகித உயர்வால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் நிதிநிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், வரும் மாதங்களில் மேலும் 50 முதல் 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதி வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்த வட்டி உயர்வின் காரணமாக, வீட்டுக் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணைத் தொகை கடன் தொகையின் அளவிற்கு ஏற்ப மாதம் ரூ.2,400 வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

வட்டி உயரும் பட்சத்தில், வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் வங்கிகள் இரண்டு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாதாந்திரத் தவணைத் தொகையை நேரடியாக உயர்த்துவது.தவணைத் தொகையை மாற்றாமல், கடன் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை சில ஆண்டுகள் நீட்டிப்பது.

வங்கிகள் தவணைத் தொகையை உயர்த்தும்போது அல்லது காலத்தை நீட்டிக்கும்போது, ஒட்டுமொத்தமாகச் செலுத்தும் வட்டித் தொகை கணிசமாக அதிகரிக்கும். எனவே, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தங்களது மாதாந்திரக் குடும்ப பட்ஜெட்டை முன்கூட்டியே திட்டமிட்டு, சாத்தியமிருப்பின் சிறு பகுதியைக் கடனின் அசல் தொகையில் முன்செலுத்துவது மூலம் வட்டிப் பாரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
