சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - ஜார்க்கண்ட்டில் மீட்பு பணிகள் தீவிரம்!

 
ரயில் தடம் புரண்டு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள பர்காகனா - சோன்நகர் ரயில் வழித்தடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.அதிக அளவிலான நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் தடம் புரண்டன.

தடம் புரண்டு விபத்து

இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக் குறித்த தகவல் அறிந்தவுடன் ரயில்வே மீட்புக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான தொழில்நுட்பக் காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.