நெகிழ்ச்சி... மகனை இழந்த துயரத்திலும் மருமகளுக்கு மறுவாழ்வு... மறுமணம் செய்து வைத்த மாமியார்!

 
திருமணம்

 

கணவரை இழந்து தவித்த இளம் மருமகளுக்கு, அவருடைய எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாமியாரே முன்நின்று மறுமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5வது திருமணம்

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பகுதியைச் சேர்ந்தவர் தாரா (60). பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவரது மகன் கண்ணன் (32). இவருக்கும் கிருஷ்ணா (28) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணன், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை இழந்த கிருஷ்ணா, மாமியார் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.

திருமணம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த மருமகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட தாரா, அவரை தனது மகளாகவே கருதி மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து தகுதியான மணமகனைத் தேர்வு செய்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிருஷ்ணாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்.மகனை இழந்த துயரத்திலும் மருமகளின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து தாரா எடுத்த இந்த முடிவு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.