சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை... பெரும் பரபரப்பு!

 
vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சொகுசு விடுதி நடத்தி வந்த அஜித் என்ற இருபத்தைந்து வயது இளைஞர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். நான்கு பேர் கொண்ட கும்பல் அஜித்தைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுகுறித்துத் தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் தப்பியோடிய மர்மநபர்கள் குறித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.