வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுங்க... பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சராமாரி கேள்விக்கணைகள்!

 
வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுங்க... பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சராமாரி கேள்விக்கணைகள்! 

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆள்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தடு. இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.இந்த வழக்கில் முன்ஜாமின் மனு மீதான விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் மற்றும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜர் ஆகி வாக்குமூலம் அளித்தனர். விசாரணையில், ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கறிஞர் சரத்குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

பூவை ஜெகன்மூர்த்தி

இதையடுத்து, “எதுக்காக சட்டமன்றத்துக்கு அனுப்பினார்கள் என்பதை தாண்டி கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா” என ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி சரமாரி கேள்வி எழுப்பினர். 200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்.நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். மக்கள் பிரச்சனையை சட்ட ரீதியாகவோ, சட்ட மன்றம் மூலமாகவோ தீர்க்க வேண்டும். கட்ட பஞ்சாயத்து மூலமாக அல்ல, இது தொடர்ந்தால் கட்சிக்கே பிரச்சனை ஏற்படும்.

58 வயது ஆன உங்களை காவல்துறை தினமும் கண்காணித்து கொண்டிருக்குமா? தவறு செய்யவில்லை என்றால் எதற்காக 2000 பேரை சேர்த்து காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள்? உங்கள் கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் இல்லாத போது எதற்காக கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு பேர் கூடினார்கள்? கட்சி தலைவரான நீங்களே காவல் விசாரணையை தடுப்பீர்களா? எம்எல்ஏவான நீங்கள் எதற்கு போலீஸ் விசாரணைக்கு செல்ல பயப்பட வேண்டும்? கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பது தான் உங்கள் பாலிசி என்றால் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்.

பூவை ஜெகன்மூர்த்தி

விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். உங்களைத் தவறாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் காவல்துறையை அழைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்க பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். விசாரணைக்கு தனியாகத்தான் போக வேண்டும்.

பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், விசாரணையின்போது கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது. கைது செய்யப்பட்டால் ஜாமீன் மனு தாக்கல் செய்யட்டும் என நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்திய பின், பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமனை கைது செய்யும்படி உத்தரவிட்டதன் பேரில் அவரை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக போலீஸ் கூறியதை அடுத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.