மகளிர் உரிமைத் தொகை திட்டம் மறுசீரமைப்பு... நாளை பணம் வராது - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

 
விஜய் விஜய்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' வழங்கும் திட்டத்தில் சில மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைச் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மே மாதத்திற்கான (மே 15) தொகை நாளை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ஃப்டெ

இத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து, உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யக் கால அவகாசம் தேவை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன், எப்போது மீண்டும் உரிமைத் தொகை டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டுள்ளன.

விஜய்

புதுமைப்பெண் & தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதாந்திர உதவித் தொகையான ரூ.1,000 இன்று வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், இத்திட்டத்தின் பெயர் மாற்றப்படலாமா அல்லது கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இருப்பினும், தகுதியுள்ள அனைத்து மகளிர்க்கும் இத்திட்டம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே முதலமைச்சரின் நோக்கம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.