அக்.9ல் முடிவுகள்... இடைத்தேர்தல் நிறைவு - தாராபுரம் 80.31%, மதுராந்தகம் 85.97 % வாக்குகள் பதிவு!

 
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் காலியாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 6 அன்று விறுவிறுப்பாகவும், எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியாக நிறைவடைந்தது.

தாராபுரம் இடைத்தேர்தலில் மொத்தமாக 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலின்போது இங்கு 89.99% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி 85.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான 92.28% வாக்களிப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை சுமார் 6.38% வாக்குகள் குறைந்துள்ளன.

வாக்குப்பதிவு தேர்தல்

இத்தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என பலமுனைப் போட்டி நிலவியது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.