தமிழ்நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நடராஜன் நியமனம் - அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தலைமைத் தகவல் ஆணையருடன் சேர்த்து மேலும் 4 பேர் மாநிலத் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:
தலைமை தகவல் ஆணையர்: நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், மாநில தகவல் ஆணையர்களாக மகாலட்சுமி, ஷபீர், மீனா, மகாலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் அனைவரும் பொறுப்பேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை (எது முந்தையதோ அதுவரை) இப்பதவியில் நீடிப்பார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் மனுக்கள் மற்றும் மேல்முறையீடுகளை விரைந்து விசாரிக்கும் வகையில் இந்த நியமனங்களுக்கான அரசாணை மனிதவள மேலாண்மைத் துறையால் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நியமனங்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
