தென்காசியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்துத் தற்கொலை!

 
விஷம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணாமலையார் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை பாண்டியன் (61). காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சொந்தமாகத் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

சொந்தத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சூசை பாண்டியன், எதிர்பாராதவிதமாக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக உறவினர்களால் மீட்கப்பட்டுப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.