விருகம்பாக்கத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!

 
அர்ச்சனா அர்ச்சனா

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மைச் செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், இன்று ஏப்ரல் 23 தனது வாக்கினைப் பதிவு செய்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அகில இந்திய சேவை வீட்டு வசதி சங்கம் (டாய்ஷா) வளாக வாக்குச்சாவடியில் அவர் வரிசையில் நின்று தனது வாக்கினைச் செலுத்தினார்.

அர்ச்சனா

தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் தேர்தலை முன்னின்று நடத்தி வரும் அவர், ஒரு சாதாரணக் குடிமகளாக வந்து வாக்களித்தது அங்கிருந்த வாக்காளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் வாக்களித்த அந்த வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், "வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல, அது ஒரு மிக முக்கியமான கடமை" என்று தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் இன்று 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று முடிந்துள்ளதைக் கண்டு திருப்தி தெரிவித்தார். மாலை 6 மணி வரை பதிவான வாக்குகளின் இறுதி விவரங்களைச் சேகரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.