வருவாய்த்துறை அமைச்சர் அப்பல்லோவில் அனுமதி... கட்சியில் பரபரப்பு!

 
கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்
 

தமிழகத்தின்  இயற்கை பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 9 முறை எம்.எல்.ஏ. 6 முறை அமைச்சராக இருந்தவர்.

கனமழை குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!!

நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக  பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அவசரமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோவில் அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனையடுத்து அவருக்கு இதயப்பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

கேகேஎஸ்எஸ்ஆர்

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வேறொரு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு  இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  இருதயத் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web