ரீவைண்ட் 2025... ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ45000/- உயர்வு...!

 
தங்கம்
 

 

இந்திய குடும்பங்களில் தங்கத்திற்கு எப்போதும் தனி மவுசு. ஆபரணமாக தொடங்கிய தங்கம், காலப்போக்கில் முதலீட்டுச் சொத்தாக மாறியது. தலைமுறைகள் கடந்து பாதுகாக்கப்படும் இந்த மஞ்சள் உலோகம் மீது மக்களின் ஈர்ப்பு குறையவே இல்லை.ஆனால் இப்போது தங்கத்தின் விலை தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப நாட்களில் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து, ‘வரலாறு காணாத புதிய உச்சம்’ என்ற வார்த்தை சாதாரணமாகி விட்டது. இதனால் தங்கம் பலருக்கும் எட்டாக்கனியாக மாறி வருகிறது.

கடந்த 15-ந் தேதிக்குப் பிறகு தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நகர்கிறது. காலை 10 மணி நிலவரப்படி தங்கம், வெள்ளி விலை தான் அதிரடி தலைப்புச் செய்தியாக உள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

நேற்று மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,770 ஆக விற்கப்படுகிறது. நேற்று ரூ.1,360 உயர்ந்த தங்கம், இன்று மேலும் ரூ.1,600 உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் கிராம் ரூ.93-க்கு விற்கப்பட்ட வெள்ளி, தற்போது கிராம் ரூ.234-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்துள்ளது. தினமும் புதிய உச்சம் என்ற நிலை தொடர்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து அக்டோபரில் ரூ.97,600-ஐ எட்டியது. இடையில் சரிவு ஏற்பட்டாலும், மீண்டும் ‘கிடுகிடு’வென உயர்ந்து தற்போது ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது. 2024 முழுவதும் ரூ.12,000 உயர்ந்த தங்கம், நடப்பாண்டில் மட்டும் ரூ.45,000 உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 தங்கம்

இந்திய குடும்பங்களில் தலைமுறைகள் கடந்து மதிக்கப்படும் தங்கம், இப்போது பலருக்கும் எட்டாக்கனியாக மாறி வருகிறது. ஆபரணமாக இருந்த தங்கம், முதலீட்டுச் சொத்தாக உயர்ந்த நிலையில், அதன் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.1,02,160, ஒரு கிராமுக்கு ரூ.12,770 என விற்பனையாகி, இல்லத்தரசிகளையும் நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.57 ஆயிரமாக இருந்த ஒரு பவுன் தங்கம், ஜெட் வேகத்தில் உயர்ந்து இடையே சரிந்தாலும், மீண்டும் அதிரடியாக ஏறி தற்போது ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது. 2024 முழுவதும் ரூ.12 ஆயிரம் உயர்ந்த தங்கம், நடப்பாண்டில் மட்டும் ரூ.45 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. வெள்ளியும் இதேபோல் கிலோ ரூ.2.34 லட்சம் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

உலகப் போர்கள், அமெரிக்க டாலர் மதிப்பு, மத்திய வங்கிகளின் முதலீடு, பணவீக்கம் போன்ற சர்வதேச காரணிகளே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம். ஊதியம் உயராத நிலையில், தங்கம் வாங்க இரண்டு, மூன்று மாத சம்பளமே தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இனி தங்கம் பழைய விலைக்கு திரும்பும் வாய்ப்பு குறைவு என்றும், எதிர்காலத்தில் விலை மேலும் உயரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.