மரம் வெட்டியதை தட்டிக்கேட்ட அரிசி ஆலை உரிமையாளர்.. ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள்!

 
சௌந்திரகுமார்

மதுரை தெப்பக்குளம் சிமென்ட் ஹால் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்திரகுமார். இவர் சிந்தாமணி ராஜமன்நகர் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். அரிசி ஆலையை ஒட்டி சௌந்திரகுமாருக்கு சொந்தமான வணிக வளாகமும் உள்ளது. இந்த கடைவீதிக்கு செல்லும் பகுதியில் பல ஆண்டுகளாக மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தை நேற்று மதியம் சௌந்திரகுமாருக்கு தெரியாமல் சிலர் வெட்டினர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சௌந்திரகுமார், மரத்தை வெட்டியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சௌந்திரகுமாரிடம் வாக்குவாதம் செய்த 4 பேரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த கும்பல், சௌந்திரகுமாரை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த சௌந்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சௌந்திரகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கொலைக் கும்பலைச் சேர்ந்த மேலப்பட்டநதியைச் சேர்ந்த மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேலுச்சாமி, கார்த்திக் ஆகிய 4 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.மரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் அரிசி ஆலை உரிமையாளர் பலியான சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web