தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு உயர்வு; கிலோவுக்கு ரூ.27 அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய ரக அரிசிகளின் விலை கிலோவுக்கு ரூ.27 வரை அதிகரித்துள்ளதுடன், அரிசி மூட்டைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துகொண்டு செல்வதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாத நிலவரத்துடன் ஒப்பிடும்போது, தற்போது 26 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில வகை அரிசிகளின் சில்லரை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தடையின்றி அரிசி கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
