பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்த ரிங்கு சிங்... வைரலாகும் புகைப்படம்!
Nov 16, 2026, 14:48 IST
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங், தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தனது திருமண அழைப்பிதழை வழங்கினார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, ரிங்கு சிங் தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியைச் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது பிரதமரிடம் ஆசியும் பெற்றார்.
இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ரிங்கு சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிரதமரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றது தனக்கு சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
