ரிஷப் மீண்டும் எழுச்சி பெறுவார்!! யுவராஜ் சிங் நம்பிக்கை!!

 
யுவராஜ் சிங் , ரிஷப்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். இவர் 2022  டிசம்பரில்  தலைநகர்  டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப்பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டுகள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

Rishab-Pant

அதன் படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரிஷப் பந்த். இது ஒருபுறமிருக்க, அவர் தன்னை மீட்டுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். சிறு சிறு உடற்பயிற்சிகள், நீச்சல் போன்ற பயிற்சிகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பந்த் வீட்டுக்கு வந்து அவரை நேரில் சந்தித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங், மீண்டும் கிரிக்கெட் ஆடினார்.

From around the web