கங்கை நதிக்கரையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டுப் பெண்கள்... வைரலாகும் வீடியோ !

 
கங்கை

 

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துச் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே குடிமைப் பொறுப்பு குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிகேஷுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண்கள், கங்கை நதியின் மணல் மற்றும் பாறைகள் நிறைந்த படித்துறைப் பகுதியில் சிதறிக் கிடந்த குப்பைகளைத் தாங்களாகவே முன்வந்து அகற்றியுள்ளனர். கையுறை அணிந்தபடி கருப்பு நிறப் பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட கழிவுகளை அவர்கள் சேகரித்துள்ளனர்.

Watch Video: Foreign Tourists Collect Plastic Waste From Ganga Ghat In Rishikesh, Indian Man Questions Lack Of Civic Sense Among Locals; Internet Reacts

இந்தக் காட்சியை அங்கிருந்த பிரசன் குமார் என்ற இளைஞர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டினர் நமது பாரம்பரிய இடத்தைச் சுத்தம் செய்யும் நிலையில், நம்மவர்கள் குப்பை வீசிச் செல்வதாக அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் பாராட்டு தெரிவிப்பதுடன், சுற்றுலாத் தலங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்