எகிறும் எதிர்பார்ப்பு... இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம்... தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் பட்டியல்!

இன்று ஜனவரி 31ம் தேதி 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அந்த பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர்ந் பிப்ரவரி 13 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள முசல்மான் வக்பு சட்டத்தை திருத்தி புதிய வக்பு சட்ட திருத்தத்தை மத்தியபாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை அரசே நிர்வகிக்கும் வண்ணம் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் அமலாகும் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ரயில்வே திருத்த சட்ட மசோதா, வங்கி சட்டம் திருத்தம் மசோதா உட்பட சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தாக்கல் செய்யப்பட உள்ள சில மசோதாக்களின் விவரம்
பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024
எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024
கொதிகலன்கள் (பாய்லர்) மசோதா, 2024
கோவா மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்கும் மசோதா தாக்கல்.
ஏற்றுமதி சட்டத்திருத்தம் 2024
கடல் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா, 2024
கடலோர கப்பல் மசோதா, 2024
வணிகக் கப்பல் மசோதா, 2024
நிதி மசோதா, 2025
விமானப் பொருள்களில் ஆர்வங்களைப் பாதுகாத்தல் மசோதா, 2025
“திரிபுவன்” சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025
குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!