எகிறும் எதிர்பார்ப்பு... நாளை 100வது பாய்ச்சலுக்கு தயாராகும் இஸ்ரோ!

 
இஸ்ரோ

நாளை 100வது  பாய்ச்சலுக்கு தயாராகி வ ருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. யெஸ், ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை ஜனவரி 29ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.

அதன்படி   என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நாளை காலை 6.30 மணிக்கு  NVS-2 செயற்கைக்கோளுடன், GSLV-F15 ராக்கெட் விண்ணில் பாய இருப்பதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது.  இது இஸ்ரோவின் 100வது ராக்கெட் என்பதே பெருமை.  இதன் எடை 2,250 கிலோ மற்றும் இது 3 கிலோவாட் வரை ஆற்றலைக் கையாளும். இதில் L1, L5 மற்றும் S பேண்டுகளில் வழி செலுத்தல் பேலோடுகள் மற்றும் சி-பேண்டில் உள்ள பேலோடுகள் ஆகியவை அடங்கும்.

NavIC என்பது இந்தியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் அமைப்பாகும், இது அமெரிக்க GPS போன்று செயல்படுகிறது. இது நிலை, வேகம் மற்றும் நேரம் போன்ற  சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரோ

இந்த அமைப்பு இந்தியாவிற்குள்ளும் மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை செல்கிறது. அதன்படி, இது இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ்  இது 20 மீட்டருக்கும் குறைவான நிலை துல்லியத்தை வழங்குகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web