எகிறும் எதிர்பார்ப்பு... குவியும் சுற்றுலா பயணிகள்... நாளை கேரளாவில் நேரு டிராபி படகுப் போட்டி!

 
நேரு டிராபி படகு போட்டி

நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகள் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் கேரளத்தில் குவிந்து வருகின்றனர். நாளை செப்டம்பர் 28ம் தேதி கேரளத்தில் நேரு டிராபி படகுப் போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் கனஜோராக நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் படகு போட்டிக்கு கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். 

கேரளாவின் போற்றப்படும் பாரம்பரியங்களில் ஒன்றான நேரு டிராபி படகுப் போட்டி இந்த வருடம் நடைபெறுமா, ரத்து செய்யப்படுமா என்கிற இழுப்பறி நிலை நீடித்து வந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள கேரள மக்களும் கூட நேரு டிராபி படகுப் போட்டியை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். 

நேரு டிராபி படகு போட்டி

நம்ம ஊரு பொங்கல், தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்வதைப் போல ஓணம் திருவிழா என்பது கேரள மக்களின் முக்கிய பண்டிகை. முன்னதாக வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தின் காரணமாக முதலில் ஒத்திவைக்கப்பட்ட போட்டி, மறு திட்டமிடப்பட்ட தேதியில் நடைபெறுமா என்கிற நிச்சயமற்ற தன்மையை நீடித்து வந்தது கேரள மக்களை கவலையடைய செய்திருந்தது. கேரளத்தில் மற்ற படகுப் போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைந்து விட்ட நிலையில், நாளை நேரு டிராபி போட்டி எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 

நேரு டிராபி படகு போட்டி

நேரு டிராபி படகுப் போட்டி வெறும் போட்டி அல்ல, இது கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகும். பங்கேற்பாளர்களின் ஆர்வமும் ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பும் இந்த நிகழ்வின் ஆழமான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. நெருங்கும் போது, ​​​​இது தண்ணீரில் வேகம் மற்றும் திறமைக்கான சோதனை மட்டுமல்ல, இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களின் நெகிழ்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான சான்றாகவும் இருக்கும் என்பதால் நம்ம ஊரு ஜல்லிக்கட்டு போட்டியைப் போல தங்களின் பாரம்பரியமான விளையாட்டாகவே இந்த போட்டியைப் பார்க்கிறார்கள் கேரள மக்கள். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web