எகிறும் எதிர்பார்ப்பு... தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!
தமிழக சட்டசபையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் ஆகியோர் பதிலளித்துப் பேசுகின்றனர். ஆகஸ்ட் 17 - செப்டம்பர் 8ம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுச் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளதால், இக்கூட்டத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
