எகிறும் எதிர்பார்ப்பு... ஆட்சியைக் கலைக்க பேரம் பேசிய வழக்கு... செந்தில் பாலாஜி, அசோக்குமார் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணை!

 
செந்தில் பாலாஜி அசோக்

ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் ஆட்சிக் கவிழ்ப்புக்காகப் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் காரணமாகக் காவல்துறையினர் தங்களைக் கைது செய்யக்கூடும் என்பதால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

செந்தில்பாலாஜி அசோக்

சென்னையில் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இருவரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான முக்கிய விசாரணை இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர் ஏற்கனவே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் திருச்சி நரேஷ் வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கப் பணத்தைக் கத்தையாகப் பறிமுதல் செய்துள்ள சூழலில், இன்று பிற்பகல் நீதிமன்றம் எடுக்கப் போகும் முடிவின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி மீதான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் அமையப் போகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் இன்று பிற்பகல் விசாரணை பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.