எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடக்கம் - பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்!

 
சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் 2026-27-ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை) காலை தொடங்குகிறது. காலை 9:30 மணிக்குச் சபை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இரங்கல் செய்திகளைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கான நேரமும் பதில்களும் இடம்பெறும். கேள்வி நேரம் முடிவடைந்ததும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.

விஜய் சட்டசபை கூட்டணி கவிழுமா

உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள். சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு, ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று, ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமைச்சர்களின் இறுதிப் பதிலுரையுடன் பொது விவாதம் நிறைவடையும்.

முதல்வர் விஜய்

ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். முதல் நாளில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறைகள் எடுத்துக் கொள்ளப்படும். மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய மாநிலப் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகக் காரசாரமான விவாதங்களை எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.