எகிறும் எதிர்பார்ப்பு... இஸ்ரேலில் இன்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - ஆட்சியைத் தக்கவைப்பாரா நெதன்யாகு?!

 
நெதன்யாகு இஸ்ரேல்

இஸ்ரேலில் நாடாளுமன்றத்தின் 120 இடங்களுக்கான பொதுத்தேர்தல் இன்று அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 73,36,553 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெளிநாடு வாழ் இஸ்ரேலியர்களுக்குத் தபால் அல்லது இணையவழி வாக்குப்பதிவு வசதி இல்லாததால், வாக்களிப்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 67,000 இஸ்ரேலியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

டிரம்ப் - நெதன்யாகு ட்ரம்ப்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி 'லிகுட்' கூட்டணிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் தலைமையிலான 'யாஷார்' எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தவொரு முன்னணி கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் 'தொங்கும் நாடாளுமன்றம்' அமைய வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சிறிய கட்சிகள் மற்றும் அரபு அரசியல் கட்சிகளின் ஆதரவே அடுத்த அரசைத் தீர்மானிக்கும்.

நெதன்யாகு

2023 காசா போர் மற்றும் அதனைத் சார்ந்த சம்பவங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.