எகிறும் எதிர்பார்ப்பு... என்ன செய்ய போகிறார் விஜய்?! இன்று 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!
ஏகப்பட்ட பில்டப்களுடன் களமிறங்கி இருக்கும் விஜய் என்ன செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே மட்டுமல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும் எழுந்துள்ளது. இன்று 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில், 234 தொகுதிகளிலும் களம் காணும் தவெக வேட்பாளர்களைத் தலைவர் விஜய் நேரில் அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கான முறையான அனுமதியைப் பெறத் தவெக நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கடிதம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்ய இருப்பது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தப் பட்டியலில் எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலாக உள்ளன.
