எகிறும் எதிர்பார்ப்பு... வேர்ல்டு கப் கிரிக்கெட் அட்டவணை... நாளை இரவு வெளியீடு!

 
2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை நாளை இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

உலகக்கோப்பை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிடும் இந்த அட்டவணை நாளை இரவு சரியாக 8.30 மணிக்கு வெளியாகிறது. இத்தொடரானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக நடத்தவுள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.