ஆரோக்கியா பால், தயிர் விலை உயர்வு - பொதுமக்கள் கவலை!

 
ஆரோக்கியா ஆரோக்யா பால்

தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா நிறுவனம் தனது பால் மற்றும் தயிர் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் நுகர்வோருக்கு மாதாந்திர செலவு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆரோக்யா

ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை விற்பனையில் இருந்த விலையிலிருந்து மாறி, தற்போது ஒரு லிட்டர் ஆரோக்கியா பால் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாலைத் தொடர்ந்து ஆரோக்கியா தயிரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் தயிர் 88 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை 90 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால்

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பால் மற்றும் தயிரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது நுகர்வோர் மத்தியில் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தி வேதனையை அளித்துள்ளது.