உஷாரா இருங்க... கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூளையை தாக்கும் அபாயம்!

 
மூளை

 சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில்  கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு  எதிராக  எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் இந்த மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம்.  
கொரோனா பாதிப்பே  பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் இன்னொரு திசையில், அந்த பாதிப்புகளில் மற்றொன்று மூளையை மையம் கொண்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

மூளை
அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் பாதிப்புகளில் தொடங்கி மூளை சுருக்கம் வரை அந்த பாதிப்பு நீடிக்கக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது கொரோனாவுக்கு காரணமான வைரஸ் பல வழிகளில் மூளை ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கிறது எனத் தெரிவிக்கிறது. ’மூளை மூடுபனி’ என்பது பலர் அனுபவிக்கும் குறிப்பிடத்தக்க சுகாதார நிலையாக அறியப்பட்டது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையை குறித்த ஆய்வுகளில் மூளையின் நீடித்த வீக்கம் மற்றும் 7 ஆண்டுகள் வரையிலான முதுமை நிலை வரை பல மாற்றங்களைக் கண்டறிந்தனர். இது நடைமுறையில் சாதாரண நினைவாற்றல் பிரச்சினை முதல் நீடித்த அறிவாற்றல் குறைபாடுகள் வரை, கொரோனா பாதிப்பில் மீண்டவரை அச்சுறுத்தி வருகின்றன.  மிதமான மற்றும் லேசான பாதிப்புகளுக்கு அப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ அனுமதி வரை தீவிர பாதிப்பு கண்டவர்களின் மூளை, 20 ஆண்டுகள் வயதானதன் பாதிப்புக்கும் ஆளாகக்கூடும்.

மூளை

அந்த வயதுக்கான அறிவாற்றலில் குறைபாடுகள் உட்பட அரிதான வேறு சில மூளை பாதிப்புகளையும் உருவாக்கக்கூடும். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின்  மூளைகளை ஆய்வு செய்ததில், கொரோனா எவ்வாறு மூளையில் பேரழிவுக்கான சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை மருத்துவ ஆய்வாளர்களுக்கு உணர்த்தி உள்ளன.   கொரோனாவால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்கள் இனி இதயம் மட்டுமன்றி மூளை குறித்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web